• Breaking News

    நம்பியூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் சுப்பையா வாழ்த்து


    ஈரோடு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டியில் நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டார அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் குருமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இப் போட்டியானது பல்வேறு வகையான வண்ண பட்டை பிரிவு சண்டை பிரிவு கட்டா பிரிவு என 20க்கும் மேற்பட்ட சுற்றுகள் நடைபெற்றது அதில் குருமந்தூர் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி கோப்பையும் பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுச் சென்றனர்.

    அதேபோல் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டிச் சென்றனர்.

    அரசுப் பள்ளிக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டத்தை குருமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நம்பியூர் வட்டார கல்வி அலுவலர் சுப்பையா பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் எஸ் எம் சி பி டி ஏ உறுப்பினர்கள் இருபால் ஆசிரியர்களும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments