• Breaking News

    கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி நிதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மேசை, இருக்கைகள் வழங்கப்பட்டது


    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள காரப்பாடி மற்றும் காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு மேசைமற்றும் இருக்கைகளை முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன்  தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து வழங்கினார் .  இவ்விழாவில் பவானிசாகர் ஒன்றிய தெற்கு செயலாளர் வி.ஏ.பழனிசாமி  , புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.மூர்த்தி ,  பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் சரோஜா பழனிசாமி ,  ஒன்றியகுழு உறுப்பினர்கள் கண்ணம்மாள் நஞ்சப்பன், வேலுசாமி ,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகன், சாந்தி ராமசாமி, மணிசேகர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ. பண்ணாரி எம் எல் ஏ.,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  கே. கே. காளியப்பன் , நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி( எ) சுப்பிரமணி ,  முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்  அஇஅதிமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் , பொதுமக்கள் , ஆசிரியர்கள்  பங்கேற்றனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments