ஈரோடு அருகே மயான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி தரகோரி சத்தி துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 10, 2023

ஈரோடு அருகே மயான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி தரகோரி சத்தி துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,  கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிபுதூர் கிராமம், நஞ்சப் செட்டிபுதூர் மற்றும் காரணச்சேரி  கிராம மக்களின் மயான நிலத்தை, தனிநபர் ஆக்கிரமப்பு செய்தது தொடர்பாக,

தனிநபர் ஆக்கிரப்பு அகற்றி, மயான பூமியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளவீடுசெய்து தரக் கேட்டு கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம்.சரவணன் தலைமையில் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனு அளிக்கும் நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிசாமி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ் ரமேஷ்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வடிவேலு, சுந்தரம். மற்றும் ஊராட்சிவளர்ச்சி குழு உறுப்பினர் ராசு (எ)முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

மனுவினை பெற்றுக் கொண்ட துணை வட்டாட்சியர், வட்டாச்சியர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். மனு அளிக்கும் நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment