தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் - MAKKAL NERAM

Breaking

Saturday, October 28, 2023

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததானம் முகாம் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பேரிடர் மையத்தில் 28.10.2023 சனிக்கிழமையன்று  நடைபெற்றது.

இதில் மாவட்டப் பொருளாளர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்கள்.கோட்டைப்பட்டினம் கிளைத் தலைவர் அய்யூப்கான், செயலாளர் இத்ரீஸ் கான், பொருளாளர் சஃபியுல்லாஹ், துணைத் தலைவர் முஹம்மது அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு 37 யூனிட்கள்  இரத்தம் கொடையாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இரத்தம் வழங்கிய அனைத்து இரத்ததான கொடையளர்களுக்கும் சான்றிதழ்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் டாக்டர் .ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்கள்.

இறுதியாக நன்றியுரையாற்றிய மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் சஃபியுல்லாஹ் அவர்கள் கூறும்போது "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இம்முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் கொடையளித்தவர்கள், இதற்காக பொருளாதார உதவி செய்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த கிளை சகோதரர்கள், தலைமையேற்று நடதித்தந்த மாவட்ட நிர்வாகிகள், மேலும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment