புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் குழந்தை வளர்ப்பு பணிகள் திட்டம் சார்பாக அறந்தாங்கி ஆவுடையார்கோவில் திருவரங்குளம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் உள்ள 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சல், குங்குமம், பூ, IEC கையேடு, பழங்கள் அடங்கிய பரிசுத் தட்டுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் மற்றும், அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
News Source: Elaiyaraja
No comments:
Post a Comment