அறந்தாங்கி அருகே 108 ஆம்புலன்சிலையே கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம்......108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு...... - MAKKAL NERAM

Breaking

Sunday, December 24, 2023

அறந்தாங்கி அருகே 108 ஆம்புலன்சிலையே கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம்......108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு......


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சனிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மனைவி தேவிகா நிறைமாத கற்பினியாக இருந்த நிலையில் அவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


அந்த ஆம்புலன்ஸ் இடைக்காடு என்ற இடத்தில் வரும்போது தேவிகாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே சூழ்நிலையை உணர்ந்து கொண்ட அந்த 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் சத்யா உள்ளிட்ட பணியாளர்கள் ஆம்புலன்ஸிலேயே தேவைக்காவிற்கு பிரசவம் பார்த்து உள்ளனர்.


இதில் தேவிகாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.பின்னர் தாயையும் சேயையும் பத்திரமாக கொண்டு சென்று அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தற்போது தாயும் சேயும் நலமாக உள்ள சூழலில் அவசரத்தை உணர்ந்து தேவிகாவிற்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment