திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னை சமுத்திரம் கிராமத்தில் மின் கசிவு ஏற்பட்டு M. கண்ணனுக்கு சொந்தமான குடியிருப்பு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறின. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தன.
சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் துணிகள் பள்ளி மாணவ புத்தகங்கள் சேதமடைந்தன. இந்த தகவலை அறிந்த செங்கம் தீயணைப்பு துறையினர் விரைவில் வந்து நீண்ட நேரம் போராடி தீ,யை அணைத்தனர் .இதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
செங்கம் செய்தியாளர் எஸ் சஞ்சீவ்.
No comments:
Post a Comment