வாட்டி வதைக்கும் கோடை வெயில்..... பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க சுகாதாரத்துறை உத்தரவு...... - MAKKAL NERAM

Breaking

Saturday, April 27, 2024

வாட்டி வதைக்கும் கோடை வெயில்..... பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க சுகாதாரத்துறை உத்தரவு......

 

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும் .உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் .ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment