தஞ்சாவூர்: கடன் பிரச்சனையால் போலீஸ் ஏட்டு தற்கொலை‌‌ - MAKKAL NERAM

Breaking

Saturday, April 27, 2024

தஞ்சாவூர்: கடன் பிரச்சனையால் போலீஸ் ஏட்டு தற்கொலை‌‌

 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன் பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து சம்பவ நாளில் வீட்டில் உள்ள எலி மருந்தை  தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment