அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் இல்லை - அமைச்சர் பெரியகருப்பன் - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 18, 2024

அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் இல்லை - அமைச்சர் பெரியகருப்பன்

 

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் குன்றத்தூர் பெரிய தெருவில் நகர செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பெரிய கருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் அன்பரசன் பேசுகையில், "திமுக அதிகமான வாக்குகள் பெற்ற தொகுதி நம்ம தொகுதி. அதிமுக இடைத்தேர்தலில் நிற்கவில்லை என கூறி உள்ளனர். இப்போது நாம் உஷாராக இருக்க வேண்டும். அதிமுக, பாஜக கள்ள கூட்டணி வைத்து நமக்கு எதிராக வேலை பார்ப்பார்கள்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், "கள்ள உறவு வைத்திருந்தவர்கள் அதனை நீட்டிக்கும் வகையில் தேர்தல் களத்தில் அதிமுக போட்டியிடுவதில்லை என கூறியுள்ளனர். அது அச்சமா அல்லது அழுத்தத்தின் காரணமாக என தெரியவில்லை. இடை தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிச்சாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment