15 வயது சிறுவனை திருமணம் செய்த 30 வயது இளம்பெண்..... ஓட்டம்பிடிக்க தயாராக இருந்த நேரத்தில் நடந்த திருப்பம்..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

15 வயது சிறுவனை திருமணம் செய்த 30 வயது இளம்பெண்..... ஓட்டம்பிடிக்க தயாராக இருந்த நேரத்தில் நடந்த திருப்பம்.....

 

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது இளம் பெண் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியுள்ளனர். வயது வித்தியாசம் அதிகம் இருந்ததாலும் அந்தப் பெண்ணை அக்கா என்று சிறுவன் அழைத்ததாலும்  யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு சிறுவன் மீது காதல் மலர்ந்ததால் சிறுவனை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் பேசி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் இது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுடைய பழக்கம் பற்றி கடையில் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு சந்தேகம் வர சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுவனை பெற்றோர்கள் கண்டித்த நிலையில் மகனை ரகசியமாக கண்காணித்தனர்.

பிறகு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வர இளம்பெண் சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் தப்பி செல்ல முயன்றுள்ளார். அதன்படி இருவரும் வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தனர். உடனே தகவல் அறிந்து அங்கு விரைந்த சிறுவனின் பெற்றோர் மகனை மீட்டனர். பிறகு இளம் பெண் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment