புளியங்குடி அருகே 273 மது பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் உத்தரவின் பேரில், எஸ்ஐ மாடசாமி, காளிராஜ், வினோத், திருப்பதி ஆகிய காவலர்கள் நெல்கட்டும் செவல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற நபரை விசாரணை செய்ததில், அவர் நெல்கட்டும் செவல் ஊரை சேர்ந்த வெள்ளத்துரை மகன் செல்வராஜ் (40) என்பதும், அவர் மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 273 பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு 50 ஆயிரம் ஆகும்.
No comments