தனியார் லாட்ஜில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது - MAKKAL NERAM

Breaking

Monday, June 16, 2025

தனியார் லாட்ஜில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

 


சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, R-4 சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் நேற்று இரவு, தி.நகர், வடக்கு உஸ்மான் ரோட்டிலுள்ள தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில் மேற்படி இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தனியார் விடுதி மேலாளர் உட்பட 9 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 8 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.56,400 பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, R-4 சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 9 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment