கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி பேரூர் திமுக சார்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 4, 2025

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி பேரூர் திமுக சார்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

 


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக சார்பில் ஆரணி பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆரணி பேரூர் செயலாளர் முத்து ஏற்பாட்டில் அவைத்தலைவர் ரமேஷ் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக அனைவரையும் ஆரணி பேரூர் பொருளாளர் கரிகாலன்,துணைச் செயலாளர்கள் கோபிநாத், நிலவழகன், கலையரசி ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொறியாளர் அணி அமைப்பாளர் ரோஸ் பொன்னையன் அறுசுவை உணவு வழங்கினார். 

தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முஸ்தபா,பாலகுருவப்பா,நீலகண்டன், உதயகுமார்,ரகுமான்கான், ஜெயக்குமார், பாலாஜி,கவியரசு,மகேந்திரன்,நாகராஜ்,சாலேக்,சூர்யா,பிரபுகுமார்,சாய்சத்யா, பார்த்திபன்,ரவி, அரவிந்தன்,சந்தோஷ்பிரபா, சுல்தான்,செல்வகுமார், தமிழழகன், விமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment