திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த,பெரும்பேடு அருள்மிகு ஶ்ரீ முத்துகுமாரசாமி ஆலய மஹா ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.நான்கு கால யாக பூஜைகளுடன் சங்கல்பம்,ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்.ஸ்ரீ லஷ்மி ஹோமம்,ஸ்ரீ நவக்கிரஹ ஹோமங்களுடன் நான்கு காலயாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி யாத்ராதானம்,கடம் புறப்பாடு நடைபெற்று முத்து குமாரசுவாமி ஆலய விமானங்கள், முகப்பு கோபுரம் உள்ளிட்ட விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.இந்து அறநிலையத்துறை மாதவன் கார்த்திக் ராஜசேகர் சுப்பிரமணி மற்றும் பெரும்பேடு கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சுற்றுவட்டார சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு இறைஅருள் பெற்றனர்.
இதில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற திமுக உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், திமுக.ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன் உதயசூரியன். நகர செயலாளர் தமிழ் உதயன் பொன்னேரி தீபன். விவசாய அணி ஆசனபுத்தூர் சம்பத். சந்தானம்.தமிழக வெற்றிக்கழக மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் வழிபட்டனர் .
No comments:
Post a Comment