திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழ் முதலம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட கவரப்பேட்டை சத்திவேடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழ் முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே எம் எஸ் ராஜ் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை ஆய்வு செய்தனர். நிகழ்வில் ஆணையாளர் அமிழ்தமன்னன், சி எச் சேகர். அன்புவாணன். உமா மகேஸ்வரி. திருமலை நமச்சிவாயம்.ஊராட்சி உதவியாளர்கள் . கீழ் முதலம் பேடு மாரிமுத்து, பெருவாயல் தங்கராஜ், பெரிய ஓபலாபுரம் சாமுவேல், கீழ் முதல் மேடு ஊராட்சியின் கணினி உதவியாளர் கிருபா, உதவியாளர் பாலாஜி, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் பயிர் விதைகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி ஜே கோவிந்தராஜன் பயனாளிக்கு வழங்கினார். சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் வழங்கினார்.
No comments:
Post a Comment