நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லராமபுரத்தில் கல்லூரி முன்பு பயணிகள் நிழற்குடையினை அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லராமபுரத்தில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி முன்பு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்து திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்றத் தலைவர் சிவஆனந்த், பவுண்டேஷன் மேலாளர் காருண்யா குணவதி, மேலநீலிதநல்லூர் பாஜக ஒன்றிய தலைவர் பரமசிவன், சங்கரன்கோவில் நகர தலைவர் உதயகுமார், முத்துப்பாண்டியன், தங்கதுரை , பேச்சியம்மாள், வெள்ளத்துரை மற்றும் கல்லூரி துணை பேராசிரியர் செந்தில் பேராசிரியர்கள் அருள் மனோகரி, ஜாபர் சாதிக், டாக்டர் கணபதி, சுரேஷ் குமார், கோகில், டாக்டர் ஈஸ்வரன், நித்யா, தன்னார்வலர்கள் கற்பகராஜ், அரிச்சந்திரன், சங்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment