தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புனித மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் பத்து மாணவ மாணவிகள் கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சினில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே மற்றும் யோகா போட்டியில் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட பத்து மாணவ மாணவிகளும் யோகா மற்றும் கராத்தே போட்டிகளில் சுமார் 13 தங்கப்பதக்கமும், 7 வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.அவர்களை பாராட்டும் விதமாக இன்று புனித மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த விழாவில் பள்ளியின் கராத்தே மற்றும் யோகா பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலையிலும் இந்த விழா நடைபெற்றது.
மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வருங்காலங்களில் மேற்படிப்பு படிப்பதற்கும் அரசு வேலை வாங்குவதற்கும் பயன்படும் வகையில் தமிழக அரசின் சார்பில் சான்றிதழ்களிலும் வழங்கப்பட்டுள்ளது மேலும் இவர்கள் சர்வதேச போட்டியிலும் கலந்து கொள்வார்கள் என பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment