தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் சின்னம் இது தான்.? - MAKKAL NERAM

Breaking

Saturday, August 23, 2025

தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் சின்னம் இது தான்.?


 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த சூழலில் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையில் முன்தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக வெற்றிக் கழகம் இதுவரை தேர்தலில் போட்டியிடாததால் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தில் மட்டுமே உள்ளது. தேர்தலுக்கு பின், உரிய வாக்கு சதவீதம் அல்லது உரிய அளவில் பிரதிநிதிகளை பெற்றால் அந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். இந்த நிலையில் த.வெ.க. கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது.


ஏனென்றால் நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாக, அவரது ரசிகர் மன்றமான ‘‘விஜய் மக்கள் இயக்கம்'' சார்பாக கடந்த 2022-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் போட்டியிட்டனர். அதில் அவர்கள் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை கேட்டு பெற்றனர்.


இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது 2025-ம் ஆண்டு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆட்டோ சின்னம் இல்லை. எனவே த.வெ.க. கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.


இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிய கட்சிக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை கேட்டுப் பெற முடியும். ஆனால் ஆட்டோ சின்னம், கேரள காங்கிரஸ் (ம) என்ற கட்சிக்கு, மாநில அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டு விட்டது. ஒரு மாநிலத்தில் உள்ள கட்சிக்கு ஒதுக்கப்படும் ஒரு சின்னம், வேறு மாநிலத்தில் உள்ள வேறு கட்சிக்கு ஒதுக்கப்படாது. அந்த அடிப்படையில் ஆட்டோ சின்னம், த.வெ.க.விற்கு ஒதுக்கப்படாது என்றார்.


த.வெ.க.வும் ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து பெற வேண்டும். அது என்ன சின்னம்? என்பது தான் தற்போது கேள்விக் குறியாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் 184 சின்னங்கள் உள்ளன. அதில் 182-வது சின்னமாக உள்ள “விசில்'' சின்னத்தை கேட்டுப் பெற 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக த.வெ.க. கட்சியினர் கூறுகின்றனர்.


ஏனென்றால் விஜய் நடித்த “பிகில்'' (விசில்) படம் வெற்றி பெற்றது. மேலும் அந்த சின்னத்தை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்கின்றனர். இது தவிர தென்னை மர தோப்பு, லேப் டாப், டெலிவிஷன், பேட் போன்றவற்றையும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.

No comments:

Post a Comment