தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் முத்தாலம்பாறை பஞ்சாயத்து ஜே ஜே நகர் இந்திரா காலனியில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு ஏற்கனவே அமைப்பின் சார்பில் போராட்டம் செய்து மேல்நிலைத் தொட்டியானது அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்டது.
இத்தொட்டியில் குடிதண்ணீர் தேக்கம் செய்யும் பொழுது நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் மெய்வழி மக்கள் இயக்கம் சார்பில் நேரடியாக தொட்டியை பார்வையிட்ட பொழுது ஜே ஜே நகர் இந்திரா காலனிக்கு மயிலாடும்பாறை BDO அவர்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து பார்த்த பொழுது அதிகாரிகள் சரி செய்து தருவதாகவும் மேலும் அவர்களின் அடிப்படைத் தேவைகளான சுடுகாடு சுற்றுச்சுவர் காத்திருப்போர் கூடம் சுடுகாட்டு கொட்டகை கழிப்பிடம் சோலார் பால்வாடி விளக்கு ஈபி சர்வீஸ் இவை அனைத்தும் உடனடியாக சரி செய்து தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து பழங்குடியின மக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment